Monday 23 December 2013

கோபாலா, நீ எப்படா திருந்துவ

தலைமை ஆசிரியர் பிரர்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களிடம்:

நீங்க வெச்சிருக்க்ற் மடிக்கணினி யார் கொடுத்தது

மாணவர்கள் :>>>>>>>>>

நீங்க வெச்சிருக்கற்  புத்தகம்  எல்லாம் யார் கொடுத்தது

மாணவர்கள் : >>>>>>>>

நீங்க வெச்சிருக்கற பேக் யார் கொடுத்தது

மாணவர்கள் : >>>>>>>

நாளைக்கு அமைச்சர் வறார். சில விலையில்லாப் பொருட்களை வழங்குவார்.

கொபாலன் பாலனிடம் : இவ்ளவு பணம் இவங்களுக்கு எப்டிடா கெடச்சது. நம்ம் கட்ற வரிய எல்லாம் அமுக்கிருவாங்களா



தாயார் : ஏண்டா கோவாலு. இந்த மின்வெட்டு என்னடா. அவங்க இருந்தபோது மூணு மணி நேரம். இவங்க வந்தபோது பத்து மணி நேரம். பெற்கு மூணி மணி நேரம் ஆக்கிட்டாங்க.

கோபாலன் : அம்மா. ஒரு வீட்ல மாமியார் மருமக என்ன பண்ராங்க. எதையாவது எடுத்து ஒளிச்சு வச்ருவாங்க. மத்தவ தேடிக் கெடக்காதபோது திடீர்னு எடுத்து கொடுப்பாங்க. அது மாதிரிதான். எல்லாம் தன்னாலதான் முடியும்னு காட்டிக்கத்தான்.


தாயார் : கோவாலு. எங்கடா கெளம்பிட்ட

கோபாலன் : கொவிலுக்கு போய்ட்டு வரேம்மா.

தாயார் : சீக்கிரம் போய்ட்டு வாடா  ஒங்க அப்பன் பாத்தா திட்டுவான்..



கோபாலன் : ஏம்மா அப்பா ரேசன் கடேல எவ்னாவது சிரிச்சா கடுப்பாறாரு.

தாயார்   தலைவர் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் அப்டீன்னாராம். அவங்க்  சிரிச்சா இவ்ரு பொழப்பு என்னாவ்ரது



தந்தை : கோவாலு சோல்லுடா. கடவுளை நம்பரவன் முட்டாள் காட்டுமிறாண்டி.

கோபாலன் : அப்ப கல் தோன்றி மண் தோன்றா காலத்தில இருந்த சனங்கள்ளாம் கடவுளை நம்புனாங்களா


தந்தை : நாங்க போராடினேம்ல. எல்லா சாதிக்காரங்களும் அர்ச்சகராலாம்னு அரசாங்கம் சொல்லிருச்சு

தாயார் : கோவாலு. என்னடா நேத்லேருந்து யோச்னையா இருக்க.

கோபாலன் : வகுப்புல ஒரு பய நம்ம அப்பாவோட தலவர் தன்னோட வீட்ட எல்லாம் எங்களுக்குத்தான் வாடகைக்கு விட்ருந்தாருன்னு  சொல்றான். ஈரோட்ல ஒரு கூட்டத்ல கூட சொன்னாராம். நெசமாவான்னு யோசிசுட்ருக்கேன்.

தந்தை : டேய் கோவாலு. இன்னமே அந்த  பயக கூடல்லாம் சேராதடா.

இவனோட ப்ரச்னயாப்போச்சு.  என்னத்த்ல்லாமோ சொல்லி அம்மாவக் கெடுத்ருவான் போல்ருக்கு


கோபாலன்     தமிழர்கள் சிரிக்க எனது அன்புக் காணிக்கை


No comments:

Post a Comment